சர்வதேச சந்தையில் பெட்ரோல் - டீசல் விலை பன்மடங்கு உயரும் அபாயம் - அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்பு

சவுதி அரேபியாவில் எண்ணைய் கிடங்கு மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தையில் பெட்ரோல் - டீசல் விலை பன்மடங்கு உயரும் அபாயம் - அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்பு
x
சவுதி அரேபியாவில் எண்ணைய் கிடங்கு மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து, சர்வதேச சந்தையில், கச்சா எண்ணைய் விலை 12 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், இந்தியாவில், பெட்ரோல் - டீசல் விலை பன்மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அநேகமாக, லிட்டருக்கு 5 ரூபாய் முதல் 6 ரூபாய் வரை, பெட்ரோல் - டீசல் விலை உயரக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. மற்றொருபக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயர வாய்ப்பு  உள்ளது. தற்போது ஏற்பட்டு உள்ள பொருளாதார நெருக்கடி நிலையில், இந்த விலை உயர்வு, பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்