"இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் தோற்றுப்போகலாம்" - பாக். பிரதமர் இம்ரான் கான் பரபரப்பு கருத்து

"போர் ஏற்பட்டால் அணு ஆயுதப் போராக மாறும்"
இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் தோற்றுப்போகலாம் - பாக். பிரதமர் இம்ரான் கான் பரபரப்பு கருத்து
x
இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் தோற்றுப் போகலாம் என்றும் ஆனால், இரு நாடுகளும், அணு ஆயுத பலம் பொருந்தியவை என்பதால் அதன் பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

அணு ஆயுத பலம் பொருந்திய இரு நாடுகள், போரிட தொடங்கும் போது, அது அணு ஆயுத போராக மாறுவதற்கு நிறைய வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் போர் ஏற்படும் போது பாகிஸ்தான் தோற்றாலும், அதன் பின்னர் சரண் அடையாமல், பாகிஸ்தான் கடைசி வரை அதன் சுதந்திரத்துக்காக போராடும் என்று கூறி உள்ள அவர், அதிலும் அணு ஆயுத பலம் பொருந்திய பாகிஸ்தான் போன்ற நாடு அப்படி போராடும் போது, அதன் விளைவுகள் இந்திய துணை கண்டத்தை தாண்டி பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா.வை நாடியதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்த தகவலை அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்