ஆப்கான் போரில் அமெரிக்காவுடன் நின்றது தவறு - இம்ரான் கான்

ஆப்கான் போரில் அமெரிக்காவுடன் பாகிஸ்தான் கைக்கோர்த்து கொண்டது தவறு என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
ஆப்கான் போரில் அமெரிக்காவுடன் நின்றது தவறு - இம்ரான் கான்
x
ஆப்கான் போரில் அமெரிக்காவுடன் பாகிஸ்தான் கைக்கோர்த்து கொண்டது தவறு என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளை எதிர்த்து அமெரிக்காவுடன் இணைந்து பாகிஸ்தான் சண்டையிட்டதாக கூறினார். ஆனால் தற்போது பாகிஸ்தானே தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக தங்கள் மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டுவதாக இம்ரான் கான் வேதனை தெரிவித்தார். கடந்த காலங்களில் ரஷ்யாவை எதிர்க்க, ஆப்கான் தீவிரவாதிகளுக்கு அமெரிக்கா நிதியுதவி அளித்ததாகவும், அவர்களுக்கு பாகிஸ்தான் சார்பாக பயிற்சி அளித்ததாகவும் இம்ரான் கான் தெரிவித்தார். ஆனால், தற்போது ஆப்கான் தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்கு எதிராகவே திரும்பிவிட்டதாக இம்ரான் கான் கவலை தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்