மெல்போர்ன் : 2-வது நாளாக உடுமலை ராதாகிருஷ்ணன் ஆய்வு

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், 2- வது நாளாக இன்று, மெல்போர்ன் நகரில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழகம் மற்றும் லா ட்ரோப் பல்கலைக்கழகத்தை பார்வையிட்டார்.
மெல்போர்ன் : 2-வது நாளாக உடுமலை ராதாகிருஷ்ணன் ஆய்வு
x
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், 2- வது நாளாக இன்று, மெல்போர்ன் நகரில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழகம் மற்றும் லா ட்ரோப் பல்கலைக்கழகத்தை பார்வையிட்டார். இவ்விரு பல்கலைக்கழகங்களின் நவீன ஆய்வு கூடங்களையும், வசதிகளையும் பார்வையிட்டு, சிறப்பம்சங்கள் குறித்து கேட்டறிந்தார். கால்நடை நோய் புலனாய்வு மற்றும் நோய் தடுப்பூசி உருவாக்குவதில் இவ்விரு பல்கலைக் கழகங்களுடன் இணைந்து செயல்பட ஒப்புதல் அளிக்கப்பட்டது. பேராசிரியர்கள் - மாணவர்கள் பரிமாற்றம் மற்றும் கூட்டு ஆய்வுகள் செய்யவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள, நடவடிக்கை எடுக்க ஒப்புக்கொள்ளப்பட்டதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்