தொடர்ந்து எரிந்து வரும் 'அமேசான்' காடுகள் - தீயை அணைக்க தொடரும் போராட்டம்

அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள பெரும் தீயை அணைக்க கடும் போராட்டம் நடந்து வரும் நிலையில், அதற்கு உதவுவதாக ஜி 7 நாடுகள் எடுத்த முடிவை பிரேசில் நிராகரித்துள்ளது.
தொடர்ந்து எரிந்து வரும் அமேசான் காடுகள் - தீயை அணைக்க தொடரும் போராட்டம்
x
பூமியின் நுரையீரல் என்றழைக்கப்படும், உலகின் மிகப்பெரிய காடுகள் அமேசான். பூமிக்கு தேவையான 20 சதவீத ஆக்சிஜனை அமேசான் காடுகளே வழங்கி வருகிறது. கார்பனை கிரகித்து பருவநிலை மாற்றத்தை பெருமளவு கட்டுப்படுத்தி வருவது இந்த அமேசான் காடுகள்.

இந்நிலையில் இந்த காடுகளில் ஏற்பட்ட தீ, பெருமளவில் பரவி, தொடர்ந்து எரிந்து வருகிறது. கோடை காலங்களில் வழக்கமாக காட்டுத்தீ ஏற்படும் என்றாலும், தற்போது முன் எப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய அளவில் காட்டுத்தீ ஏற்பட்டிருப்பது அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

அரிய வகை உயிரினங்கள், தாவரங்கள் இந்த காட்டுத்தீயால் அழிந்து வரும் நிலையில், இங்கு வாழும் சுமார் 10 லட்சம் பழங்குடியினரும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது குறித்து நாசா மற்றும் பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தீயின் தீவிரத்தை பிரதிபலிக்கின்றன. இது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் மக்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த காட்டுத்தீக்கு காரணம் பிரேசில் அதிபர் போல்சனாரோவின் கொள்கைகளே என்று பலதரப்பினர் குற்றம் சாட்டி வரும் நிலையில்,  
இது குறித்து ஜி 7 மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்களும் தங்களது வேதனையை பதிவு செய்தனர். 

ஜி7 மாநாட்டில் தொடர்ந்து விவாதம் நடைபெற்று வரும் நிலையில், காட்டுத்தீயை அணைப்பதற்கும், தீயால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவுவதற்கும் உலக நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். 

மேலும், பிரிட்டன் 10 மில்லியன் டாலர் வழங்கும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். இதுபோன்ற உலகம் முழுவதிலும் இருந்தும் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் காட்டுத்தீயை அணைக்க உதவி வருகின்றனர். இந்நிலையில் ஜி7 நாடுகளின் உதவியை நிராகரித்துள்ள பிரேசில், தீயை அணைக்க ராணுவ உதவியுடன் பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.    


Next Story

மேலும் செய்திகள்