பற்றி எரிந்து வரும் அமேசான் காடு : காட்டுத் தீ இடங்களில் விமானம் மூலம் தண்ணீர் தெளிப்பு

உலகின் முக்கிய மழைக்காடான அமேசானில், கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பற்றி எரிந்து வரும் நிலையில், தீயைக் கட்டுப்படுத்தும் வேலைகளில் பொலிவியா அரசு ஈடுபட்டுள்ளது.
பற்றி எரிந்து வரும் அமேசான் காடு : காட்டுத் தீ இடங்களில் விமானம் மூலம் தண்ணீர் தெளிப்பு
x
உலக ஆக்சிஜன் உற்பத்தியில் 20 சதவீத பங்களிப்பை கொண்டுள்ள அமேசான் காடுகளில், கடந்த சில நாட்களாக காட்டுத் தீ பரவி வருகிறது.  அதன் காரணமாக பிரேசில், பொலிவிய நாடுகளில்  சுமார் 16 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான காடுகள் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளதுடன்,  கரும்புகை சூழ்ந்து காற்று மாசும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ள பொலிவியா அரசு,  காட்டுத் தீ பரவி வரும் இடங்களில் விமானங்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது.  இதற்காக பிரமாண்ட தொட்டிகளில் நீரை நிரப்பில் விமானத்தில் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. தீ விபத்துக்கு பிரேசில் விவசாயிகளே காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்