ராணுவ கவுன்சிலுக்கும், எதிர்கட்சிக்கும் அதிகார பகிர்வு - சூடான் மக்கள் வெற்றி கொண்டாட்டம்

சூடானில் ராணுவ கவுன்சிலுக்கும், எதிர்கட்சிக்கும் இடையே அதிகார பகிர்வு தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டதை அந்நாட்டு மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ராணுவ கவுன்சிலுக்கும், எதிர்கட்சிக்கும் அதிகார பகிர்வு - சூடான் மக்கள் வெற்றி கொண்டாட்டம்
x
சூடானில்  ராணுவ கவுன்சிலுக்கும், எதிர்கட்சிக்கும் இடையே அதிகார பகிர்வு தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டதை அந்நாட்டு மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். சூடான் அதிபராக பதவி வகித்த உமர் அல் பஷீர், கடந்த ஆண்டு நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, அவரது ஆட்சியை ராணுவம் கவிழ்த்தது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் முதல் ஆட்சி நடத்தி வரும் ராணுவ கவுன்சிலுக்கும், இடைக்கால அரசுக்கு இடையே அதிகார பகிர்வு தெடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதனை சூடான் மக்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். 


Next Story

மேலும் செய்திகள்