பூடானை போன்ற நட்பு நாட்டை விரும்பாதவர் இருக்க முடியுமா? - பூடானை போன்ற நட்பு நாட்டை விரும்பாதவர் இருக்க முடியுமா"

பூடானின் வளர்ச்சியில் பங்கு வகிப்பதில் இந்தியா பெருமையடைவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
பூடானை போன்ற நட்பு நாட்டை விரும்பாதவர் இருக்க முடியுமா? - பூடானை போன்ற நட்பு நாட்டை விரும்பாதவர் இருக்க முடியுமா
x
அரசு முறை பயணமாக பூடான் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டின் பிரதமர் லொடெ ஷெரிங்கை சந்தித்து பேசினார். அப்போது, பூடானில் அமைக்கப்பட்டுள்ள நீர்மின் நிலையம் மற்றும் இஸ்ரோ சார்பில் தெற்காசிய செயற்கைகோள் தரை கட்டுப்பாட்டு நிலையம் ஆகியவற்றை பிரதமர் மோடி திறந்து வைத்தார். தொடந்து, ரூபே கார்டை அறிமுகப்படுத்திய அவர், அதனை பயன்படுத்தி  பொருள் வாங்கினார். இதையடுத்து இரண்டு நாடுகள் இடையே கல்வி உள்ளிட்ட துறைகளில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 130 கோடி இந்தியர்களின் இதயத்தில் பூடானுக்கு ஒரு தனி இடம் உள்ளதாக தெரிவித்தார். பூடானை போன்ற ஒரு நட்பு நாட்டை யார் தான் விரும்ப மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். பின்னர், மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, அங்கு சைப்ரஸ் மரக்கன்றை நட்டார். 

புத்தர் சிலை முன்பு பிரதமர் மோடி தியானம்



பூடான் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு திம்புவில் அமைந்துள்ள புத்தர் சிலை முன்பு அமர்ந்து சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அங்குள்ள சிம்டோகா ஜாங்கில் புத்த துறவிகளை சந்தித்த மோடி, அவர்களுடன் கலந்துரையாடினார்.


Next Story

மேலும் செய்திகள்