சீன துணை அதிபருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் சந்திப்பு

சீன துணை அதிபரை வாங்கிஷனை, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் இன்று சந்தித்து பேசியுள்ளார்.
சீன துணை அதிபருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் சந்திப்பு
x
மூன்று நாள் பயணமாக சீனா சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு துணை அதிபர் வாங்கிஷனை இன்று சந்தித்து பேசினார். துணை அதிபர் இல்லம் சென்ற அமைச்சர் ஜெய்சங்கருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இருநாடுகள் இடையிலான கலாச்சாரம் தொடர்பான உயர்மட்ட அமைப்பின் இரண்டாவது மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள அமைச்சர் ஜெய்சங்கர், கலாச்சாரம் மற்றும் மக்களுக்கு மக்கள் இடையிலான தொடர்பை அதிகரிப்பது குறித்து இந்த 3 நாள் மாநாட்டில் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்