பிரதமர் மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் இருக்கும் 'பேனர்'

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன், பிரதமர் மோடி இருக்கும் மிகப்பெரிய 'பேனர்' இஸ்ரேலில் வைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் இருக்கும் பேனர்
x
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன், பிரதமர் மோடி இருக்கும் மிகப்பெரிய 'பேனர்' இஸ்ரேலில் வைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் செப்டம்பர் 17ஆம் தேதி பொது தேர்தல் நடைபெற உள்ளதால், தற்போது அங்கு தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. மீண்டும் ஆட்சியை தக்கவைக்க அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு முனைப்பு காட்டி வருகிறார். இந்நிலையில், தேர்தல் விளம்பரத்தில், நேதான்யாகுடன் பிரதமர் மோடி இருப்பது போன்ற பிரமாண்ட 'பேனர்', இஸ்ரேலில் உள்ள மிகப்பெரிய கட்டடம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் உடன் நேதான்யாகு இருக்கும் பேனரும் வைக்கப்பட்டுள்ளது. உலக தலைவர்களை பயன்படுத்தி, லிகுட் கட்சி செய்திருக்கும் விளம்பரம், பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக அந்நாட்டு பத்திரிகையாளர் அமிசாய் ஸ்டெய்ன் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்