காஷ்மீர் விவகாரத்தில் டிரம்பிடம் கோரிக்கை எதுவும் வைக்கவில்லை - வெளியுறவு துறை அமைச்சகம் திட்டவட்டம்

காஷ்மீர் விவகாரத்தில் சமரச தூதுவராக செயல்படுமாறு அமெரிக்க அதிபரிடம் பிரதமர் மோடி கோரிக்கை வைக்கவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது.
காஷ்மீர் விவகாரத்தில் டிரம்பிடம் கோரிக்கை எதுவும் வைக்கவில்லை - வெளியுறவு துறை அமைச்சகம் திட்டவட்டம்
x
அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார். அப்போது காஷ்மீர் விவகாரத்தில் உதவும்படியும், சமரச தூதுவராக செயல்படும் படியும் டிரம்பிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.இதே கோரிக்கையை இந்திய பிரதமர் மோடியும் தம்மிடம் தெரிவித்திருந்தாக அதிபர் டிரம்ப் கூறி இருந்தார். ஆனால் இதனை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் விடுத்துள்ள பதிவில், இந்தியா, பாகிஸ்தான் இருநாடுகளுக்கு இடையேயான பிரச்சினை உள்நாட்டு விவகாரத்துறை மூலமாக தீர்த்துக்கொள்ளப்படும் என்றும், சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் இறுதி ஒப்பந்தம் இதற்கான தீர்வை ஏற்படுத்தி தரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்