குல்பூஷன் ஜாதவை தூக்கிலிட தடை : சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவை தூக்கிலிட சர்வதேச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
குல்பூஷன் ஜாதவை தூக்கிலிட தடை : சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு
x
கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியாவின் உளவாளி என, பாகிஸ்தான் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட குல்பூஷனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.   இதனை ரத்து  செய்யக் கோரி இந்திய அரசு, சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பாக, சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  தீர்ப்பில் குல்பூஷன் ஜாதவுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், குற்றச்சாட்டிற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும், எனவே குல்பூஷன் ஜாதவுக்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சர்வதேச நீதிமன்றம் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. மொத்தம் 42 பக்க தீர்ப்பை வாசித்த 16 நீதிபதிகள், 15 பேர் இந்தியாவுக்கு ஆதரவாகவும், ஒருவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்