ஒரு நபர் அமரும் வகையில் சிறிய ரக மின்சார விமானம் : அமெரிக்க நிறுவனம் தயாரிப்பு
அமெரிக்காவின் டெக்சாஸ் நகரத்தில் உள்ள ஒரு நிறுவனம் ஒன்று, ஒரு நபர் அமரும் வகையில் சிறிய ரக மின்சார விமானம் ஒன்றை உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் நகரத்தில் உள்ள ஒரு நிறுவனம் ஒன்று, ஒரு நபர் அமரும் வகையில் சிறிய ரக மின்சார விமானம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த விமானம் ஜாய்ஸ்டிக் எனப்படும் உள்ளீட்டு கருவி மூலம் இயக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விமானம் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் இல்லாமலேயே இனி வானில் பறக்கலாம். லிப்ட் விமானம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் வெறும் 196 கிலோ எடையில், மணிக்கு 63 மைல்கள் தூரம் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் கார்களை போல மனிதர்கள் பயன்படுத்தும் வாகனமாக இது அமையும் என்று தயாரிப்பு நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Next Story