இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவு கோலில் 7.5ஆக பதிவு
இந்தோனேசியாவின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம், ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரிலும் உணரப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம், ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரிலும் உணரப்பட்டுள்ளது. இது, ரிக்டர் அளவு கோலில் 7 புள்ளி 5 ஆக பதிவானது. 200 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கின. அதிர்வை உணர்ந்த பொதுமக்கள் உடனடியாக கட்டடங்களை விட்டு வெளியேறி, சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேத விவரம் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும், விடப்படவில்லை.
Next Story