அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜப்பான் பயணம்

ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அங்கு இருநாட்டு வர்த்தகம், பாதுகாப்பு தொடர்பாக அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து பேச உள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜப்பான் பயணம்
x
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 4 நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.அந்நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே வை சந்தித்து பேசும் அவர், இருநாட்டு வர்த்தகம், மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்து பேசுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.டிரம்ப்பின் வருகையை முன்னிட்டு ஜப்பானில் பல சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் பொருட்களுக்கு ஜப்பானில் வரிசலுகையை எதிர்பார்க்கும் அமெரிக்கா, ஜப்பான் கார்களுக்கு இறக்குமதி வரியை உயர்த்தும் முடிவை சமீபத்தில் கைவிட்டது.இந்நிலையில் ஜப்பான் சென்றுள்ள டிரம்ப், இது தொடர்பாக வலியுறுத்துவார் என்று தெரிகிறது. அதே சமயம், நடப்பாண்டின் பிற்பாதியில் ஜப்பானில் தேர்தல் வர உள்ள நிலையில், அந்நாட்டின் முக்கிய துறையாக விவசாயமும்  உள்ளதால், அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு சலுகை வழங்குவது தேர்தலில் எதிரொலிக்கும் என்று ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சி நினைக்கிறது.இதனால் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசுகையில் இந்த விவகாரம் முக்கிய விஷயமாக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனிடையே, ஜப்பானில் நடைபெற்ற மல்யுத்த போட்டியை கண்டுகளித்த அவர், அதில் வெற்றிபெற்ற அசானோயாமா என்ற மல்யுத்த வீரருக்கு கோப்பையை வழங்கினார்.ஜப்பானில் சுமோ மல்யுத்த போட்டியை கண்டுகளித்த முதல் அமெரிக்க அதிபர் டிரம்ப் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்