கேரளாவிலிருந்து 250 கிலோ கஞ்சா இலங்கைக்கு கடத்தல்

கேரளாவிலிருந்து இலங்கைக்கு கடத்திச் சென்ற 250 கிலோ கஞ்சாவை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
கேரளாவிலிருந்து 250 கிலோ கஞ்சா இலங்கைக்கு கடத்தல்
x
இலங்கை யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி கடல் பகுதியில்  சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த இலங்கையை சேர்ந்த படகை, அந்நாட்டு கடற்படையினர் சோதனை செய்தனர். அதில், கேரளாவிலிருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா மூட்டை மூட்டையாக இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் அந்த நபர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. 


Next Story

மேலும் செய்திகள்