"போர் தொடுக்க விரும்பினால் அழிவாக அமையும்" - ஈரானுக்கு அமெரிக்க அதிபர் கடும் எச்சரிக்கை
பதிவு : மே 20, 2019, 09:55 AM
ஈரான் போர் தொடுக்க விரும்பினால், அதுவே அந்நாட்டிற்கு அழிவாக அமையும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரான் போர் தொடுக்க விரும்பினால், அதுவே அந்நாட்டிற்கு அழிவாக அமையும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரான் உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்து வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதை தொடர்ந்து ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்த அமெரிக்கா, ஈரானிடமிருந்து உலக நாடுகள் கச்சா எண்ணெய் வாங்க தடை விதித்தது. இதனால் இருநாடுகளிடையே மோதல் வலுத்து வந்தது. இந்நிலையில்  மத்திய கிழக்கு நாடுகள் கச்சா எண்ணெயை அனுப்பும் ஹோர்முஸ் ஜலசந்தியை மூட போவதாக ஈரான் அறிவித்தது.  அவ்வழியே சென்ற சவுதி உள்ளிட்ட நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் மர்மமான முறையில் தாக்கப்பட்டன. இதையடுத்து அமெரிக்க போர்க்கப்பல் ஈரானுக்கு எதிராக பெர்ஷியன் கடல் பகுதிக்கு சென்றதால் 
அங்கு போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.    

தொடர்புடைய செய்திகள்

யுரேனியம் செறிவூட்டல் விவகாரம் : அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு

யுரேனியம் செறிவூட்டல் விவகாரத்தில் ஈரான் மீதான பொருளாதார தடை விரைவில் மேலும் அதிகரிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

50 views

பேச்சுவார்த்தையை முன்னெடுத்து செல்ல டிரம்ப், கிம் ஜாங் உன் முடிவு

ராணுவத்தின் இருப்பை குறைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை தொடர்ந்து முன்னெடுத்து செல்வது என நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இருநாடுகளின் தலைவர்களும் முடிவெடுத்துள்ளதாக வடகொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

29 views

வட கொரிய அதிபருக்கு டிரம்ப் தனிப்பட்ட முறையில் கடிதம்

வட கொரிய அதிபர் கிம்மிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளார்.

85 views

பிற செய்திகள்

கலிபோர்னியா : கடலில் அழகாக துள்ளி தாவி சென்ற டால்பின்கள்

கலிபோர்னியாவின் தெற்கு கடற்பகுதியில் நூற்றுக்கணக்கான டால்பின்கள் தண்ணீரில் துள்ளி அழகாக தாவி சென்றன.

30 views

சிலி : உறைய வைக்கும் குளிர் நீரில் குளிக்கும் போட்டி...

உறைய வைக்கும் குளிர் நீரில் குளிக்கும் போட்டி சிலியில் நடைபெற்றது.

34 views

பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டம் : கண்கவர் அணிவகுப்பு, வியக்க வைத்த சாகசம்

பிரான்ஸின் தேசிய தினம் அதன் தலைநகர் பாரீஸில் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

25 views

வணிக வளாகத்தில் இளைஞர்கள் போராட்டம் : குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்திய போலீசார்

ஹாங்காங்கில் தீவிரமடையும் அரசுக்கு எதிரான போராட்டம் போராட்டக்காரர்கள், போலீசார் இடையே கடும் மோதல்

23 views

100 ஆண்டுகள் பழமையான ஹோட்டலில் பற்றிய தீ

100 ஆண்டுகள் பழமையான ஹோட்டலில் பற்றிய தீ மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய கரும்புகை

26 views

டிரோன் எனும் ஆளில்லா குட்டி விமானங்களுக்கான போட்டி : மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் வானில் வட்டமடித்த டிரோன்கள்

இத்தாலியில் உள்ள துரின் நகரில் டிரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.