ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை : ஈரான், இந்திய வெளியுறவு அமைச்சர்கள் பேச்சு

ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடைக்கு பிறகு, டெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூம், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் செரீப்பும், பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை : ஈரான், இந்திய வெளியுறவு அமைச்சர்கள் பேச்சு
x
ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடைக்கு பிறகு, டெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூம், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் செரீப்பும், பேச்சுவார்த்தை நடத்தினர். அமெரிக்காவுடன் கடந்த 2015ஆம் ஆண்டு போடப்பட்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்வதாக ஈரான் அறிவித்தது. இதனால்  அந்நாட்டின் மீது அமெரிக்கா, பொருளாதார தடை விதித்துள்ளது. இதன்மூலம், அந்நாட்டிடம் இருந்து பெட்ரோலிய பொருட்கள், இரும்பு, தாமிரம் உள்ளிட்ட பொருட்களை மற்ற நாடுகள் இறக்குமதி செய்வது தடைபட்டுள்ளது. இந்நிலையில், இந்தியா மற்றும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தை முக்கியத்துவதும் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்