மணிக்கு 119.6 கி.மீ வேகத்தில் ஆட்டோவை ஓட்டி சாதனை

இங்கிலாந்தில் மேட் எவ்ரார்ட் (Matt Everard) என்பவர் மணிக்கு 119.6 கிலோ மீட்டர் வேகத்தில் ஆட்டோவை ஓட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
மணிக்கு 119.6 கி.மீ வேகத்தில் ஆட்டோவை ஓட்டி சாதனை
x
இங்கிலாந்தில் மேட் எவ்ரார்ட் (Matt Everard) என்பவர் மணிக்கு 119.6 கிலோ மீட்டர் வேகத்தில் ஆட்டோவை ஓட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். உலகம் முழுவதும் பல்வேறு வகைகளில் கின்னஸ் சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. இந்நிலையில் ஆட்டோவை வேகமாக ஓட்டி சாதனை படைத்துள்ளார், இங்கிலாந்தை சேர்ந்த மேட் எவ்ரார்ட். தாய்லாந்தில் இருந்து வாங்கிய இந்த ஆட்டோவை, அதிவேகமாக செல்வதற்கு ஏற்றார் போல தொழில்நுட்பங்களை அவர் மாற்றியுள்ளார். இதற்காக மேட்,  சுமார் 15 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்