இலங்கை குண்டு வெடிப்பு : 45 சிறுவர்கள் உயிரிழப்பு - ஐ.நா. அறிவிப்பு

இலங்கையில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 320-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அதில் 45 பேர் சிறுவர்கள் என ஐ.நா. தெரிவித்துள்ளது.
இலங்கை குண்டு வெடிப்பு : 45 சிறுவர்கள் உயிரிழப்பு - ஐ.நா. அறிவிப்பு
x
இலங்கையில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 320-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அதில் 45 பேர் சிறுவர்கள் என ஐ.நா. தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக யுனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி தேவாலயத்தில் 27 சிறுவர்களும், மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நடந்த தாக்குதலில், 18 மாத கைக்குழந்தை உள்பட 13 குழந்தைகளும் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாடுகளை சேர்ந்தவர்களின்  5 குழந்தைகளும் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் 4 பேர் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் யுனிசெப் தெரிவித்துள்ளது. சில குழந்தைகள் தங்கள் கண்முன்னே பெற்றோரை அல்லது தாய், தந்தையரில் ஒருவரை இழந்ததை பார்த்த அதிர்ச்சியில் இருப்பதாகவும் யுனிசெப் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்