குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு எம்.பி.க்கள் மவுன அஞ்சலி

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அந்நாட்டு நாடாளுமன்றம் கூடியது
குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு எம்.பி.க்கள் மவுன அஞ்சலி
x
இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அந்நாட்டு நாடாளுமன்றம் கூடியது. இந்த சிறப்பு கூட்டத்தின் முதல் நிகழ்வாக குண்டு வெடிப்பில், பலியானவர்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்கள், 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் அவையில் பேசிய அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, தீவிரவாதத்தை ஒழிக்க சர்வதேச நாடுகளின் ஆதரவு பெறப்படும் என உறுதியளித்தார். தற்போது இலங்கையில் தலை தூக்கியுள்ள தீவிரவாதம் வித்தியாசமானது என்றும், அதனை எதிர்கொள்ள சக்தி உள்ளதாகவும் கூறினார். இந்நிலையில், அவையில் பேசிய  எதிர்கட்சித்தலைவர்  ராஜபக்சே, தமது ஆட்சியில் பயங்கரவாத சம்பவம் எதுவும் நிகழவில்லை என்றும், நாட்டின் பாதுகாப்பில், அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.தொடர்ந்து பேசிய அமைச்சர் ருவன் வி​ஜேவர்தன, குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக உயர்ந்துள்ளதாகவும், இவர்களில் 38 பேர் வெளிநாட்டினர் என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்