நெருப்பை சாப்பிடும் இளம்பெண் : இணையத்தில் வைரலாகும் வீடியோ

இளம்பெண் ஒருவர், எரியும் நெருப்பை விழுங்கி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறார்
நெருப்பை சாப்பிடும் இளம்பெண் : இணையத்தில் வைரலாகும் வீடியோ
x
இளம்பெண் ஒருவர், எரியும் நெருப்பை விழுங்கி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறார். உலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு துறையில் சாதனை படைக்க விரும்புகிறார்கள், அந்த வகையில் இந்த இளம்பெண், எரியும் நெருப்பு துண்டுகளை வாய்க்குள் விழுங்கி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறார். கொளுந்து விட்டு எரியும் நெருப்பு துண்டுகளை, இவர் கரண்டி மூலம் எடுத்து, மிகவும் லாவகமாக வாய்க்குள் போடுகிறார். லேசாக நெருப்பு கையில் பட்டாலே நாம் துடித்து விடுவோம். ஆனால் இந்த இளம்பெண், சாக்லெட்டுகளை சாப்பிடுவது போல, நெருப்புத் துண்டுகளை விழுங்குகிறார். ஒருவேளை, இவர் மாஜிக் நிபுணராக இருப்பாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. மொத்தத்தில் இந்த வீடியோ, 
இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்