குண்டுவெடிப்பு- இலங்கை பொருளாதாரத்திற்கு பாதிப்பு?

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகளினால், சுற்றுலாத்துறை தற்காலிகமாக பாதிக்கப்பட்டாலும், நீண்ட கால பாதிப்புகள் ஏதும் இருக்காது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
குண்டுவெடிப்பு- இலங்கை பொருளாதாரத்திற்கு பாதிப்பு?
x
* இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகளினால், சுற்றுலாத்துறை தற்காலிகமாக பாதிக்கப்பட்டாலும், நீண்ட கால பாதிப்புகள் ஏதும் இருக்காது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

* இலங்கையில், 2009 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பிறகு, அதன் பொருளாதார வளர்ச்சி சீரடைந்தது.

* சுற்றுலா துறை, தேயிலை ஏற்றுமதி, ஆடைகள் ஏற்றுமதி, விவசாயம் ஆகியவை இலங்கை பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் முக்கிய துறைகள் ஆகும்.

* 2009ம் ஆண்டில் 3 புள்ளி 4 சதவீதமாக இருந்த அதன் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம்,  2010ம் ஆண்டில் 8 சதவீதமாக வளர்ச்சி பெற்றது. அதன் பிறகு 2011 மற்றும் 2102ம் ஆண்டுகளிலும் இலங்கையின் உள்நாட்டு உற்பத்தி, ஏறுமுகத்துடனே காணப்பட்டது.

* 2011ம் ஆண்டில் 8 புள்ளி 4 சதவீதமாகவும், 2012ம் ஆண்டில் 9 புள்ளி 1 சதவீதமாகவும் இருந்தது.

* அதன் பிறகு இலங்கையின் அரசியல் சூழல் மற்றும் புதிய பொருளாதார கொள்கையினால் அதன் பொருளாதார வளர்ச்சியில் சிறிது பின்னடைவு ஏற்பட்டது.

* 2015ஆம் ஆண்டில் இலங்கையின் உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாகவும், 2017 ஆம் ஆண்டில் 3 புள்ளி 3 சதவீதமாகவும் 2018ம் ஆண்டில் 3 புள்ளி 9 சதவீதமாகவும் சரிவடைந்தது.

* தொடர் குண்டு வெடிப்புகளினால், இலங்கைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்காலிகமாக பாதிக்கப்பட்டாலும், நீண்ட கால பாதிப்புகள் இருக்காது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

* நீண்ட கால பாதிப்புகள் இருக்காது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

* வெளிநாடுகள், இலங்கையில் செய்யும் முதலீடுகள் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி ஆர்டர்களில் எந்த பாதிப்பும் இருக்காது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 



Next Story

மேலும் செய்திகள்