இலங்கையில் அவசரநிலை பிரகடனம் : மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை அமல் - நாடாளுமன்றம் நாளை கூட உள்ளதாக தகவல்

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் அவசரநிலை பிரகடனம் : மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை அமல் - நாடாளுமன்றம் நாளை கூட உள்ளதாக தகவல்
x
இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு பதற்றம் நிலவியதால் ஞாயிறு மாலை 6 மணியில் இருந்து இன்று காலை 6 மணி வரை, பிறப்பிக்கப்பட்டிருந்த அவசர நிலை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் சமூக வலைதளங்களை முடக்கிய உத்தரவு நீடிக்கிறது. இதற்கிடையே, இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலை குறித்து ஆலோசிப்பதற்காக நாளை அந்நாட்டு நாடாளுமன்றம் கூட உள்ளது. இதனிடையே கட்டுநாயக்க விமான நிலையம் அருகே மேலும் ஒரு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்குழாயில் வைக்கப்பட்டிருந்த அந்த குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்