இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் - 215 பேர் உயிரிழப்பு

இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் 8 இடங்களில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் 215 பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் - 215 பேர் உயிரிழப்பு
x
இலங்கையில் நீர்க்கொழும்பு பகுதியில் உள்ள கட்டான் தேவாலயத்தில் ஈஸ்டர் பிரார்த்தனையின்போது இன்று காலை 8.45 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்தன.இதில், 50 பேர் பலியாகினர்.இதுபோல, மட்டக்களப்பில் உள்ள சீயோன் தேவாலயத்தில் மற்றொரு குண்டு வெடித்தது. அதில், 27 பேர் கொல்லப்பட்டனர்.இது தவிர,தலைநகர் கொழும்புவில் கொச்சிக்கடை பகுதியில் உள்ள அந்தோணியர் தேவாலயம் மற்றும் கொழும்பில் உள்ள ஷங்ரிலா, கிராண்ட் மற்றும் கிங்ஸ்டன் ஆகிய மூன்று நட்சத்திர ஓட்டல்களிலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.இந்த இடங்களில் 25 பேர் வரை உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். குறிப்பாக, கொழும்பு கிங்ஸ்டன் ஓட்டலில் நடந்த குண்டு வெடிப்பில் மட்டும் 10 பேர் கொல்லப்பட்டனர்.8 இடங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலர் உயிரிழந்ததால்,  உயிரிழந்தோர் எண்ணிக்கை  215  ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் 100க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் இறந்தவர்களில் 3 இந்தியர்களும் அடக்கம் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.இலங்கையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு, நிகழ்ந்துள்ள இந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலால் பொதுமக்களிடம் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்