1381 கிலோ தங்கம் சிக்கிய விவகாரம் : திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 17ஆம் தேதி தேர்தல் பறக்கும் படையினரிடம் பிடிபட்ட ஆயிரத்து 381 கிலோ தங்கம் திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
1381 கிலோ தங்கம் சிக்கிய விவகாரம் : திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
x
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 17ஆம் தேதி தேர்தல் பறக்கும் படையினரிடம் பிடிபட்ட ஆயிரத்து 381 கிலோ தங்கம் திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாததால், தேர்தல் பறக்கும் படையினர் ஆயிரத்து 381 கிலோ தங்கத்தை பிடித்து பூந்தமல்லி கருவூலத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில் தேவஸ்தான அதிகாரிகள் தங்களுடைய தங்கம் என்றும், தாங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் டெபாசிட் செய்திருந்ததாகவும் தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்தனர். இதனையடுத்து தங்கம் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்