தலையின் பின்னால் தலைவர்கள் உருவம் : சீன இளைஞர் அபாரம்
பதிவு : ஏப்ரல் 20, 2019, 10:46 AM
சீனாவில், சிகை அலங்கார நிபுணர் ஒருவர், வாடிக்கையாளர் தலையின் பின்னால் தலைவர்களின் உருவங்களை பதிவு செய்யும் வகையில் முடி வெட்டி, அசத்தி வருகிறார்.
* சீனாவில், சிகை அலங்கார நிபுணர் ஒருவர், வாடிக்கையாளர் தலையின் பின்னால் தலைவர்களின் உருவங்களை பதிவு செய்யும் வகையில் முடி வெட்டி, அசத்தி வருகிறார். மிகவும் வித்தியாசமான இந்த சிகை அலங்கார நிபுணருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

* WANG JIANFENG என்ற 39 வயது சிகை அலங்கார நிபுணர், சாதாரண முடி திருத்துபவராக இல்லாமல், மிகவும் வித்தியாசமானவராக திகழ்கிறார். CHINAவின்  ZHEJING மாகாணம் SHAOXING என்ற நகரில் இவரது சிகை அலங்கார நிலையம் இயங்கி வருகிறது. தலைவர்களின் உருவங்களை, வாடிக்கையாளர் தலையின் பின்பக்கம் பதியும் வகையில் மிகவும் நேர்த்தியாக முடி வெட்டி, இவர் அசத்தி வருகிறார். 

* சீன கம்யூனிஸ்ட் தலைவர் மாசேதுங், தற்காப்பு சண்டை கலைஞர் புரூஸ்லீ என பல முக்கிய விஜபிக்கள் இவரது கைவண்ணத்தில் வாடிக்கையாளர் தலைகளின் மூலம் 
உலா வருகிறார்கள். 

* மாதத்திற்கு இதுபோன்று 8 முதல் 10 வாடிக்கையாளர்கள், தாங்கள் விரும்பும் விஜபி உருவம் தங்கள் தலையில் தேவை என வருவதாக கூறும் WANG JIANFENG , இதற்காக இந்திய மதிப்பில் சுமார் 2 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்.

* பிற சிகை அலங்கார நிபுணர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, மிகவும் வித்தியாசமான இந்த சிகை அலங்கார நிபுணர் WANG JIANFENG - க்கு உலகம் முழுவதும் வாடிக்கையாளர்கள் உருவாகி வருகிறார்கள். குறிப்பாக, சீனாவில், இவரது பியூட்டி பார்லருக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

435 views

பிற செய்திகள்

கந்தசுவாமி கோவில் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் - இலங்கை வடமாகாண ஆளுநருக்கு கடிதம்

இலங்கை நல்லூர் கந்தசுவாமி கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக வடமாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது.

111 views

கால்பந்து விளையாடும் ரோபோக்கள்

சீனாவில் ரோபோக்கள் விளையாடும் ரோபோ கப் கால்பந்து போட்டி நடைபெறுகிறது.

36 views

இலங்கை இறுதிப்போரின் 10ஆம் ஆண்டு நினைவு தினம்

இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரின் பத்தாம் ஆண்டு நினைவு தினம், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது.

64 views

ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

இலங்கையில் புத்தளம் நகரில் ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக இலங்கை புத்தளத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

107 views

விடுதலைப் புலிகள் சீருடையுடன் எலும்புக்கூடு - முள்ளிவாய்க்காலில் கண்டெடுக்கப்பட்டதால் அதிர்ச்சி

இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவ முகாமுக்கு அருகே பள்ளம் தோண்டிய போது விடுதலை புலிகள் சீருடையுடன் உடைந்த எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

48 views

அந்தமான் மற்றும் உத்தரகாண்டில் லேசான நில நடுக்கம்

அந்தமான் மற்றும் உத்தரகாண்டில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.