அனைத்து திருடர்களுக்கும் மோடி பெயர் - சர்ச்சையாகும் ராகுல் கருத்து
பதிவு : ஏப்ரல் 20, 2019, 02:15 AM
வழக்கு தொடரப்போவதாக லலித் மோடி டிவிட்டரில் எச்சரிக்கை
அனைத்து திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் உள்ளதாக சமீபத்தில் நடைபெற்ற பிரசாரம் ஒன்றில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்போவதாக ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி தெரிவித்துள்ளார். டிவிட்டரில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், கடந்த 50 ஆண்டுகளாக இந்தியாவை கொள்ளையடித்தது ராகுல் காந்தியின் குடும்பம் தான் என்று குற்றம்சாட்டி உள்ளார்.ஐபிஎல் தலைவராக இருந்த போது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான லலித் மோடி, இந்தியாவிலிருந்து வெளியேறி லண்டனில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

பிற செய்திகள்

"டெல்லி எல்லைகள் மேலும் ஒரு வாரத்திற்கு மூடல்" - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி எல்லைகள் மேலும் ஒரு வாரத்திற்கு மூடப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தெரிவித்துள்ளார்.

20 views

உளவு பார்த்த பாக். தூதரக அதிகாரிகள் - நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவு

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த அந்நாட்டு தூதரக அதிகாரிகள் 2 பேர், டெல்லி உணவத்தில் பேசிய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

139 views

கவுன்சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி - சுகாதாரத்துறையினர் வேனில் ஏற்றிய போது கூடிய கூட்டம்

கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரில் கவுன்சிலர் ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதியானது.

64 views

முன்களப் பணியாளர்களுக்கான வன்முறை : ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது - பிரதமர்

கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் முன்களப் பணியாளர்கள் மீதான வன்முறை, மற்றும் முரட்டுத்தனமான நடத்தையை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது என பிரதமர் நரேந்திரமோடி எச்சரித்துள்ளார்.

83 views

வேலையற்றோர் எண்ணிக்கை உயர்வு - டெல்லியில் வேலையின்மை விகிதம் 59.2 %

இந்தியாவின் வேலையற்றோர் விகிதம் 23 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

64 views

விலை உயரத் தொடங்கிய எரிவாயு சிலிண்டர்கள் - தொழில் நடவடிக்கைகள் மீண்டு வருவதால் விலை ஏற்றம்

மானியமில்லா எரிவாயு சிலிண்டர் விலை 11 ரூபாய் 50 காசுகள் விலை அதிகரித்துள்ளது.

897 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.