இலங்கை வனப்பகுதிகளை பாதுகாத்த பெருமை பிரபாகரனையே சேரும் : அதிபர் சிறிசேன பாராட்டு

இலங்கையின் 20 சதவீத வனப்பகுதியை பாதுகாத்த பெருமை பிரபாகரனையே சேரும் என அதிபர் சிறிசேன பாராட்டு தெரிவித்துள்ளார்.
இலங்கை வனப்பகுதிகளை பாதுகாத்த பெருமை  பிரபாகரனையே சேரும் : அதிபர் சிறிசேன பாராட்டு
x
இலங்கை பொலன்னறுவை மாவட்டத்தில் சர்வதேச சுற்றுசூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் சிறிசேன கலந்து கொண்டு மரக்கன்றை நட்டார்.பின்னர் மாணவர்களிடையே பேசிய அவர் இலங்கையிலுள்ள 28 சதவீத வனப்பகுதியில் 20 சதவீதம் வடக்கு பகுதியில் உள்ளதாக தெரிவித்தார். அவை  பாதுகாக்கப்பட்டிருப்பதாக பெருமையாக கூறிக்கொண்டாலும் அதற்கு விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனே காரணம் என்று அவர் பாராட்டு தெரிவித்தார்.கொரில்லா தாக்குதலுக்காக வனப்பகுதியை விடுதலை புலிகள் பாதுகாத்ததாகவும் அவர் கூறினார்.யுத்தம் இடம்பெற்ற பகுதிகளை தவிர ஏனைய அனைத்து பிரதேசங்களிலும் உள்ள வனப்பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்தார்.அரசியல்வாதிகள், ஊழல் அதிகாரிகள் உள்ளிட்டோர் இலங்கை வனப்பகுதிகளை அழித்ததாகவும் அதிபர் சிறிசேன குற்றம்சாட்டினார்

Next Story

மேலும் செய்திகள்