கிரிக்கெட் வீர‌ர்கள் தொழுகைக்கு சென்ற மசூதியில் துப்பாக்கிச்சூடு : உயிர்தப்பிய வங்கதேச கிரிக்கெட் வீர‌ர்கள்

நியூசிலாந்தில் வங்கதேச கிரிக்கெட் அணி வீர‌ர்கள் தங்கியிருந்த பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிரிக்கெட் வீர‌ர்கள் தொழுகைக்கு சென்ற மசூதியில் துப்பாக்கிச்சூடு : உயிர்தப்பிய வங்கதேச கிரிக்கெட் வீர‌ர்கள்
x
நியூசிலாந்து நாட்டில், கிரிஸ்ட்சர்ச் என்ற பகுதியில் 2 மசூதிகளில் நுழைந்த மர்ம நபர்கள் திடீரென நடத்திய  துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், மசூதிக்குள் நுழையும் தீவிரவாதி ஒருவன், அங்கு கண்ணில் படுவர்களை எல்லாம் சுட்டுத் தள்ளும்,  மனதை பதை பதைக்க வைக்கும்  வீடியோ வெளியாகியுள்ளது. பலரை சுட்டுத் தள்ள வேண்டும் என்கிற நோக்கத்துடன் திட்டமிட்ட தீவிரவாதி, துப்பாக்கி முனையில் கேமராவை இணைந்து, தான் சுடுவதை வீடியோ எடுத்துள்ளான். இந்த துப்பாக்கி சூடு நடைபெற்ற இடத்துக்கு அருகில்,வங்கதேச கிரிக்கெட் அணி தங்கியுள்ளது. இது குறித்து, சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ள வங்கதேச கிரிக்கெட் வீரர் தமிம் இக்பால், துப்பாக்கிச் சூடு நடந்த மசூதியில் தொழுகைக்கு சென்ற வங்கதேச கிரிக்கெட் வீர‌ர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றும், தங்களுக்காக பிரார்த்தனை செய்யும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், நாளை நடைபெறவிருந்த நியூசிலாந்து வங்கதேசம் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்