"நாசாவின் ரோவர் செயலிழந்த‌து" -அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது நாசா

செவ்வாய் கிரகத்திற்கு நாசா அனுப்பிய Opportunity ரோவர் என்ற ரோபோட்டின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக நாசா அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
நாசாவின் ரோவர் செயலிழந்த‌து -அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது நாசா
x
 கடந்த 2004 ஆம் ஆண்டு செவ்வாயில் காலடி எடுத்து வைத்த ரோவர் மூலம் 15 ஆண்டுகளாக செவ்வாய் கிரகம் குறித்த பல்வேறு தகவல்களை நாசா பெற்று வந்த‌து. கடந்த ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி செவ்வாயில் ஏற்பட்ட புயலால்,  ரோவர், தொடர்பில் இருந்து திடீரென துண்டிக்கப்பட்டது. இந்த தகவல் பரவிய நிலையில், நாசா அதனை மீண்டும் செயல்படுத்தும் முயற்சிகளில் இறங்கியது. முயற்சிகள் பலன் அளிக்காத காரணத்தால், ரோவரின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக நாசா அறிவித்துள்ளது. அதன் நினைவாக செவ்வாயில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் நாசா பகிர்ந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்