ட்ரம்பை வெளியேற்றத் தயாராகும் 5 பெண்கள்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பை வீழ்த்த 5 பெண்கள் தயாராகி வருவது உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ட்ரம்பை வெளியேற்றத் தயாராகும் 5 பெண்கள்
x
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஜனநாயக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக  குடியரசு கட்சி சார்பில் நின்ற ட்ரம்ப் வெற்றிபெற்று அனைவடையும் திரும்பிப் பார்க்க வைத்தார். 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில்  ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,   வருகிற தேர்தலிலும் ஜனநாயகக் கட்சி சார்பில் ஒரு பெண் வேட்பாளரே ட்ரம்புக்கு போட்டியாக களம் இறங்குவார் என்கிற எதிர்பார்ப்புகள் உருவாகி உள்ளன. ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மாசாசூசெட்ஸ் செனட்டர் எலிசபெத் வாரன், நியூயார்க் செனட்டர் கிர்ஸ்டன் கில்லிபிராண்ட்,  மின்னசோட்டா செனட்டர் ஏமி க்ளொபுச்சார் ,  கலிபோர்னியா செனட்டர் கமலா ஹரீஸ் ஹூவாய் மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் துல்சி கப்பார்ட் ஆகியோர் அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். ஜனநாயக கட்சியின் சார்பில், அதிபர் தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி, ஜூலை மாதம் முடிவடையும். அதில்  தேர்வாகும் வேட்பாளர்,  நவம்பர் மாதம் நடைபெறும் தேர்தலில் டிரம்பை எதிர்த்து போட்டியிடுவார். தற்போது ஜனநாயக் கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள கமலா ஹரீஸ், துல்சி கப்பார்ட் இருவரும் இந்திய  வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதும், இதுவரை அமெரிக்க அதிபராக பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை என்பதும்  குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்