ஜொலிக்கும் சீன நகரங்கள்...சீன புத்தாண்டு கோலாகலம்...

சீன புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு, அங்குள்ள நகரங்கள் மின்னொளியில் ஜொலிக்கின்றன.
ஜொலிக்கும் சீன நகரங்கள்...சீன புத்தாண்டு கோலாகலம்...
x
சீன புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு, அங்குள்ள நகரங்கள் மின்னொளியில் ஜொலிக்கின்றன. 20 லட்சம் எல்.இ.டி விளக்குகளால் கட்டடங்களில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. பல வண்ணங்களில் ராந்தர் விளக்குகளும் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. புத்தாண்டை குதூகலமாக கொண்டாடிவரும் சீன மக்கள், தெருக்களில் ஜொலிக்கும் கட்டடங்கள் முன் நின்று செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர். இதேபோன்று, ஹாங்காங் நகரில் சீன புத்தாண்டை ஒட்டி அழகிய வாணவேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்