இலங்கையில் பட்டம் விடும் போட்டி : விதவிதமான பட்டங்களை பார்த்து ரசித்த மக்கள்

தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு இலங்கையில் நடந்த பட்டம் விடும் போட்டியில் வண்ணமயமான பட்டங்கள் வானில் பறக்க விடப்பட்டது.
இலங்கையில் பட்டம் விடும் போட்டி : விதவிதமான பட்டங்களை பார்த்து ரசித்த மக்கள்
x
இலங்கை வல்வெட்டித்துறை உதய சூரியன் கடற்கரையில் நடந்த பட்டம் விடும் போட்டியில் ஏராளமான பட்டங்கள் வானில் பறக்க விடப்பட்டது. ராணுவ டாங்கிகள் போன்ற உருவம் கொண்ட பட்டம், செய் அல்லது செத்துமடி எனும் வாசகம் பொறித்த பட்டம், ராட்சத எறும்பு தோற்றத்தில் பட்டம் என விதவிதமான பட்டங்களை மக்கள் ஆர்வத்துடன் வானில் செலுத்தி மகிழ்ந்தனர். இந்த பட்டம் விடும் திருவிழாவை பார்க்க திரண்ட மக்கள், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் கைத்தட்டி உற்சாகமடைந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்