உலக வங்கியின் புதிய தலைவர் இந்திரா நூயி ? : ஜிம் யோங் கிம் ராஜினாமாவை தொடர்ந்து வெள்ளை மாளிகை பரிசீலனை

உலக வங்கியின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த முன்னாள் பெப்சி நிறுவனத் தலைவர் இந்திரா நூயி நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
உலக வங்கியின் புதிய தலைவர் இந்திரா நூயி ? : ஜிம் யோங் கிம் ராஜினாமாவை தொடர்ந்து வெள்ளை மாளிகை பரிசீலனை
x
தற்போது தலைவராக உள்ள ஜிம் யோங் கிம் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதால், அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை ஈடுபட்டுள்ளது. உலக வங்கியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் மகள் இவாங்கா முக்கிய பங்கு வகிப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், புதிய உலக வங்கி தலைவராக தமிழகத்தை சேர்ந்த இந்திரா நூயி நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.  இந்திரா நூயி நியமிக்கப்பட்டால், உலக வங்கி தலைவராக நியமிக்கப்படும் முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெறுவார் என்றும் தெரிகிறது. கடந்த அக்டோபரில் தான் பெப்சி தலைவர் பதவியை இந்திரா நூயி ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்