நிலவில் முளைத்தது தாவரம் : வரலாற்றில் நிகழ்ந்த அதிசய நிகழ்வு

வரலாற்றில் நிகழ்ந்த அதிசய நிகழ்வாக, நிலவில் தாவரம் முளைத்துள்ளது.
நிலவில் முளைத்தது தாவரம் : வரலாற்றில் நிகழ்ந்த அதிசய நிகழ்வு
x
வரலாற்றில் நிகழ்ந்த அதிசய நிகழ்வாக, நிலவில் தாவரம் முளைத்துள்ளது. சீனா அனுப்பிய CHANGE - 4 விண்கலம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. இதுவரை அறியப்படாத நிலவின் தொலைதூர பகுதியில் ஜனவரி 3 ஆம் தேதி பத்திரமாக தரை இறங்கியதே முதல் சாதனை. இந்த விண்கலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ஆய்வு சாதனங்களில் மண், பருத்தி விதைகள், உருளைக்கிழங்கு விதைகள்,  யீஸ்ட் நுண்ணுயிர்கள் உள்ளிட்டவை இருந்தன. இந்நிலையில், இந்த திட்டத்தின் முதல் வெற்றியாக நிலவில் பருத்தி விதைகள் முளைத்துள்ளன. அதன் புகைப்படங்களை சீன விண்வெளி ஆய்வுத்துறை வெளியிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்