அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்து பெண்

அமெரிக்க அதிபர் தேர்தலில் முதன் முதலாக ஒரு இந்துப்பெண் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்து பெண்
x
ஜனநாயக கட்சியை சேர்ந்த 37 வயதான துளசி கபார்ட், அமெரிக்காவின் முதல் இந்து எம்.பி என்ற பெயரைப் பெற்றவர். 2011 ஆம் ஆண்டில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், பகவத் கீதையை வைத்து பதவியேற்றார். இந்த நிலையில் அவர், அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அடுத்த வாரத்தில் தெரிவிப்பேன் எனவும் துளசி கபார்ட் தெரிவித்துள்ளார். கத்தோலிக்க மதத்தை சேர்ந்த தந்தைக்கும் தாய்க்கும் பிறந்த துள்சி கேபர்டு இந்து மதத்தின் மேல் உள்ள ஈர்ப்பின் காரணமாக மதம் மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்