அவசர நிலையை பிரகடனப் படுத்த போவதில்லை - டிரம்ப்

அமெரிக்க- மெக்சிகோ எல்லைப் பகுதியில் சுவர் கட்டும் விவகாரத்தின் எதிரொலியாக, அதிபர் டிரம்ப் அவசர நிலையை பிரகடனப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் எதிர்க்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.
அவசர நிலையை பிரகடனப் படுத்த போவதில்லை - டிரம்ப்
x
அமெரிக்க- மெக்சிகோ எல்லைப் பகுதியில் சுவர் கட்டும் விவகாரத்தின் எதிரொலியாக, அதிபர் டிரம்ப் அவசர நிலையை பிரகடனப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் எதிர்க்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.

மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு நுழைபவர்களை தடுத்து நிறுத்தும் விதமாக, அமெரிக்க மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பப் போவதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். அதற்கு தேவையான  35 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்க, அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால், பட்ஜெட்டை நிறைவேற்றுவதில் சிக்கல் எழுந்து, ஒன்பது துறைகள் நிதி இல்லாமல் தவித்து வருகின்றன. இதையடுத்து நிதியை தரவில்லை என்றால், அவசர நிலையை பிரகடனப்படுத்தி அதன் மூலம் சுவரை கட்டி முடிப்பேன் என டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் திருப்பு முனையாக,  தற்போது எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தபோவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய டிரம்ப், மெக்சிகோ எல்லை வழியாக ஊடுருவும் பிற நாட்டவர்களால் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சுவர் கட்ட தற்போது எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், தான் பதவிக்கு வருவதற்கு முன்பு வரை அதற்கு ஆதரவு தெரிவித்தவர்கள் தான் என்றும், அவர்களுடன் 45 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினால் பிரச்சினை முடிவுக்கு வரும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்