அமெரிக்க - மெக்ஸிகோ எல்லையில் சுவர் கட்டும் விவகாரம்

17 வது நாளாக அரசு முடக்கம் - ஊழியர்கள் பரிதவிப்பு
அமெரிக்க - மெக்ஸிகோ எல்லையில் சுவர் கட்டும் விவகாரம்
x
மெக்ஸிகோ எல்லையில் சுவர் கட்டுவதற்கு அமெரிக்கா அதிபர் டெனால்ட் டிரம்ப் கோரிய நிதிக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது. எதிர்கட்சியான ஜனநாயக கட்சியின் இந்த எதிர்ப்பால், பல திட்டங்களுக்கான நிதிகளும் ஒதுக்கப்படாமல், கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி முதல் தொடர்ந்து 17-வது நாளாக அரசு முடங்கியுள்ளது. இதனால் 8 லட்சம் அரசு ஊழியர்கள் தங்கள் சம்பளமின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில், மெக்ஸிகோ எல்லையை இந்த வாரம் பார்வையிட போவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். மெக்ஸிகோ- அமெரிக்க எல்லை சுவர் விவகாரத்தை சுயநலமாக கருதி, அதிபர் டிரம்ப் அரசியல் செய்வதாக அரசு அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்