நிலாவின் மறுபக்கத்தில் முதல்முறையாக தரையிறங்கி சீனா சாதனை

முதல் முறையாக நிலாவின் மறுபக்கத்தில் சாங்இ-4 என்ற விண்கலத்தை தரையிறக்கி சீனா சாதனை படைத்துள்ளது.
நிலாவின் மறுபக்கத்தில் முதல்முறையாக தரையிறங்கி சீனா சாதனை
x
இதற்கு முன்பாக பூமியை நோக்கிய நிலவுப்பகுதியில் மட்டுமே சீனா உள்ளிட்ட நாட்டு விண்கலன்கள் தரையிறங்கி உள்ளன. இந்த நிலையில் நிலாவின் மற்றொரு புறத்தை ஆராய உருவாக்கப்பட்ட சாங்இ-4 விண்கலம், கடந்த மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில் அது வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலமாக நிலவின் மற்றொரு பகுதியில் தரையிறங்கிய முதல் நாடு என்ற சாதனையை சீனா படைத்துள்ளது. நிலாவின் மறுபக்கத்தை புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ள அந்த விண்கலம், அங்கு உயிரியல் பரிசோதனைகளை மேற்கொள்ளும் என தெரியவந்துள்ளது. இந்த விண்கலம் நிலாவில் மற்ற பகுதிகளுக்கு நகர்ந்து செல்லும் திறன் படைத்த்து என்று அதன் வடிவமைப்பாளர்கள் கூறுகின்றனர். பூமியை இந்த விண்கலம் தொடர்பு கொள்வதில் இருந்த சவாலை எதிர்கொள்ள ஏற்கனவே கியூகியாவோ என்ற செயற்கைகோளை சீனா விண்ணில் நிலைநிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்