2018ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டி : பிலிப்பைன்ஸ் அழகி பட்டம் வென்றார்

தாய்லாந்தில் நடந்து வரும் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பிலிப்பைன்ஸ் அழகி கேட்ரியானோ கிரே பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2018ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டி : பிலிப்பைன்ஸ் அழகி பட்டம் வென்றார்
x
2018ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டி தாய்லாந்து நாட்டில் நடந்தது. இதில் 94 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றிருந்தனர். இதில் இறுதி சுற்றுக்கு தென்னாப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ் மற்றும் வெனிசுலா நாட்டு அழகிகள் தகுதி பெற்றிருந்தனர். இதில் இறுதியாக பிலிப்பைன்ஸ் நாட்டு அழகி கேட்ரியானோ கிரே, பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு பிரபஞ்ச அழகிக்கான கிரீடம் சூட்டப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளில் பிலிப்பைன்சை சேர்ந்த பெண், 'மிஸ் யுனிவர்ஸ்' ஆக தேர்ந்தெடுக்கப்படுவது இது நான்காவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்