பேஸ்புக் தலைமையகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
பதிவு : டிசம்பர் 12, 2018, 01:37 PM
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பேஸ்புக் தலைமையகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பேஸ்புக் தலைமையகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மென்லோ பூங்காவில் உள்ள பேஸ்புக் அலுவலக ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அங்கு வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது கண்டறியப்பட்டது. கடந்த மே மாதம், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள யூ-டியூப் தலைமை அலுவலகத்திற்கு இதேபோன்று வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.