தற்போதைய பிரச்சினைக்கு அன்னிய தேச சக்திகள் காரணம் - சிறிசேனா பேச்சு

இலங்கை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை ஏற்கப்போவதாக இலங்கை அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.
தற்போதைய பிரச்சினைக்கு அன்னிய தேச சக்திகள் காரணம் - சிறிசேனா பேச்சு
x
இலங்கையில் பொலன்னறுவை பகுதியில், 4500 பேருக்கு நலத்திட்ட  உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரத்ன, பொலன்னறுவை நகர மேயர் ரணசிங்க உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய இலங்கை அதிபர் சிறிசேனா, அரசியலமைப்பு மூலமாக, அதிபர் என்ற தனி நபருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களால் தனக்கு மகிழ்ச்சி கிடையாது எனவும், விரைவில் இதில் மாற்றம் ஏற்பட்டு பிரதமர் மற்றும் அமைச்சரவையுடன் இணைந்து பணியாற்றும் நிலைமை உருவாகும் எனவும் தெரிவித்தார். மேலும், தற்போதைய இலங்கை பிரச்சினை என்பது, சுதேசி சிந்தனைக்கும் வெளிநாட்டு சிந்தனைக்கும் இடையிலான மோதல் எனவும், அந்நிய தேச சக்திகள் சவாலாக உள்ளதாகவும் கூறினார். இலங்கை உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதற்கு மதிப்பளித்து, அந்த தீர்ப்பின்படி எதிர்கால அரசியல் நடவடிக்கையை தொடரப்போவதாகவும் சிறிசேனா தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்