மாணவர்கள் உருவாக்கிய பிரம்மாண்ட 'காபி குவளை'...

சார்ஜாவில் 5 ஆயிரத்து 445 மாணவ, மாணவிகள் சேர்ந்து அசையும் காபி குவளை உருவாக்கி, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.
மாணவர்கள் உருவாக்கிய பிரம்மாண்ட காபி குவளை...
x
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜாவில் உள்ள சர்வதேச பள்ளி ஒன்றில், இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதற்காக மாணவ, மாணவிகளுக்கு  பல நாட்களாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கால்பந்து மைதானத்தில் மாணவர்கள் திரண்டு பிரம்மாண்ட காபி குவளை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினர். இதனை தொடர்ந்து மாணவ மாணவிகள் சிலர் டம்ளர் போன்ற உருவம் உருவாக்கி அருகில் நின்றனர். அப்போது காபி குவளையில் உருவத்தில் இருந்த சிலர் ஓடி வந்து டம்ளருக்குள் சென்று நின்றனர். இந்த காட்சிகளை உயரத்தில் இருந்து பார்ப்பதற்கு காபி குவளையில் இருந்து டம்ளரில் காபி ஊற்றுவது போன்ற தோற்றத்தை தந்த‌து. இதனால், இந்த நிகழ்வு உலகின் பிரம்மாண்ட அசையும் உருவமாக அங்கீகரிக்கப்பட்டு, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த‌து. இந்த சாதனை நிகழ்வில், பல தமிழ் மாணவ, மாணவிகளும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்