குரேஷிய கால்பந்து வீரர் லூக்கா மோட்ரிக் - 'பாலன் டி ஓர்' விருது

2018-ஆம் ஆண்டுக்கான 'பாலன் டி ஓர்' விருதை குரோஷிய கால்பந்து அணியின் கேப்டனும் ரியல் மேட்ரிட் வீரருமான லூக்கா மோட்ரிச் வென்றுள்ளார்.
குரேஷிய கால்பந்து வீரர் லூக்கா மோட்ரிக் - பாலன் டி ஓர் விருது
x
கால்பந்து உலகில் பெருமைக்கும், மரியாதைக்கும் உரியதாகக் கருதப்படும் விருது, 'பாலன் டி ஓர்'. தலைசிறந்த பத்திரிக்கையாளர்கள் வாக்களித்து, விருதுக்குரிய வீரரைத் தேர்வு செய்கிறார்கள். கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் இந்த விருதை லயோனல் மெஸ்ஸியும், கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோருமே மாறி மாறி  பெற்றுவந்தனர். 

இந்நிலையில், மெஸ்ஸி, ரொனால்டோவின் பத்தாண்டு ஆதிக்கத்திற்கு முடிவு கட்டி, 2018-ஆம் ஆண்டுக்கான 'பாலன் டி ஓர்' விருதை வென்று குரோஷியாவின் லூக்கா மோட்ரிச் சாதனை படைத்துள்ளார். இந்த ஆண்டுக்காக பிபா-வின் சிறந்த கால்பந்து வீரர் விருதை லூகா, ஏற்கனவே பெற்றது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்