அமெரிக்க முன்னாள் அதிபர் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் மறைவு : கூகுள் நிறுவன சி.இ.ஓ சுந்தர் பிச்சை இரங்கல்
பதிவு : டிசம்பர் 01, 2018, 04:12 PM
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ​ஹெச்.டப்ள்யூ புஷ்(GEORGE HW, BUSH) மறைவுக்கு கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை இரங்கல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ​ஹெச்.டப்ள்யூ புஷ்(GEORGE HW, BUSH) மறைவுக்கு கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை இரங்கல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 41-வது அதிபராக இருந்த ஹெர்பர்ட் வாக்கர் புஷ் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 94. இதுதொடர்பாக சுந்தர் பிச்சை   விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ஜார்ஜ் ​ஹெச்.டப்ள்யூ புஷ் மரண செய்தி கேட்டு வருத்தம் அடைந்ததாக தெரிவித்துள்ளார். தனது வாழ்நாள் முழுவதும் அமெரிக்காவின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர் எனவும் அவருக்கு சுந்தர் பிச்சை புகழாரம் சூட்டியுள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.