நாடாளுமன்றம் கலைப்பு சிறிசேனா விளக்கம்

அரசியல் குழப்பம், சபாநாயகரின் செயல் உள்ளிட்ட காரணங்களால் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அந்நாட்டு அதிபர் மைத்திரி பால சிறிசேன விளக்கம் அளித்துள்ளார்.
நாடாளுமன்றம் கலைப்பு சிறிசேனா விளக்கம்
x
புதிய பிரதமர் ராஜபக்சே பெரும்பான்மை நிரூபிக்கும் விவகாரத்தில், ரனில் விக்கிரசிங்கேவின் செயல்பாடு முறையற்றதாக இருந்ததாக குற்றம்சாட்டினார். அரசியல் நிலைமை சூடுபிடித்த பின்னணியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 கோடி ரூபாய் முதல் 50 கோடி ரூபாய் வரை விலைக்கு வாங்கப்பட்டதாக அதிபர் சிறிசேன கூறினார். 

இந்த காரணங்களால் தான் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தியே நாடாளுமன்றத்தை கலைத்ததாக அவர் விளக்கம் அளித்தார். உள்நாட்டு உற்பத்தி, பொருளாதார வளர்ச்சி, ஊழலற்ற ஆட்சி, ஜனநாயகத்தை பலப்படுத்த இந்த பொதுதேர்தலை நடத்தி மக்கள் செல்வாக்கில் புதிய அரசாங்கத்தை அமைப்போம் என இலங்கை அதிபர் மைத்திரி பால சிறிசேன நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

அரசு வாகனங்களை முன்னாள் அமைச்சர்கள் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் எனவும் Card-7 தவறும் பட்சத்தில் சட்ட ரீதியில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிபர் சிறிசேன எச்சரித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்