ஆண் சிங்கத்தை கடித்து கொன்ற பெண் சிங்கம்..!

அமெரிக்காவில் மனிதர்களை போல் கணவன், மனைவிக்குள் பிரச்சனை ஏற்பட்டதால் ஆண் சிங்கத்தை கடித்து பெண் சிங்கம் கொன்றுள்ளது.
ஆண் சிங்கத்தை கடித்து கொன்ற பெண் சிங்கம்..!
x
இந்தியானா மாகாணத்தில் உள்ள வன உயிரின பூங்காவில் ஜூரி என்ற பெண் சிங்கமும், நியாக் என்ற ஆண் சிங்கமும் இருந்தது. இந்த தம்பதிகளுக்கு 3 குட்டிகள் இருந்தன. இந்த நிலையில், ஆண் சிங்கத்தை பெண் சிங்கம் கடித்து கொன்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் சிங்கம் எதனால் கொன்றது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிங்கங்களுக்குள் மோத்ல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது அரிதான சம்பவம் என்று வன உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்