அருகிவரும் கொரில்லா இனத்தின் புதிய வரவு... குட்டியை பராமரிக்கும் உயிரியல் பூங்கா ஊழியர்கள்...

அருகிவரும் விலங்குகள் பட்டியலில் இருக்கும் மேற்கத்திய கொரில்லா இனத்தை சேர்ந்த கொரில்லா குட்டி ஒன்று அமெரிக்காவில் பிறந்துள்ளது.
அருகிவரும் கொரில்லா இனத்தின் புதிய வரவு... குட்டியை பராமரிக்கும் உயிரியல் பூங்கா ஊழியர்கள்...
x
அருகிவரும் விலங்குகள் பட்டியலில் இருக்கும் மேற்கத்திய  கொரில்லா இனத்தை சேர்ந்த கொரில்லா குட்டி ஒன்று அமெரிக்காவில் பிறந்துள்ளது. பிளோரிடா மாகாணத்தில் இருக்கும் ஜக்சன்வில்லே உயிரியல் பூங்காவில், இருபத்து இரண்டு வயதான கும்புகா கொரில்லாவிற்கு பிறந்துள்ள இந்த குட்டி, தற்போது பூங்காவின் ஊழியர்கள் கண்காணிப்பில் உள்ளது. தாய், குட்டியை முரட்டு தனமாக கையாளுவதால், நான்கு மாதங்களுக்கு கொரில்லா குட்டியை ஊழியர்களே பராமரிக்க உள்ளனர். இதன் மூலம் குட்டியை முறையாக கையாளுவது குறித்து கும்புகா அறிந்து கொள்ளும் என்று அவர்கள் நம்புகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்