சவுதி அரேபியா : முதல்முறையாக செய்தி வாசித்த பெண் என்ற பெருமையை பெற்ற வீம் அல் தஹீல்

சவுதி அரேபியாவின் புதிய பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் சமீபத்தில் பதவியேற்ற பின் அந்நாட்டில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைளை அதிரடியாக மேற்கொண்டுவருகிறார்.
சவுதி அரேபியா : முதல்முறையாக செய்தி வாசித்த பெண் என்ற பெருமையை பெற்ற வீம் அல் தஹீல்
x
குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுத்துவருகிறார். அதன்படி பெண்கள் கார் ஓட்ட அனுமதி, சவுதியில் திரையரங்கம் விண்வெளி திட்டம் போன்றவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது அந்நாட்டு பெண்கள் மற்றுமொரு மைல் கல்லையும் எட்டியுள்ளனர். சவுதி அரேபியாவில் முதல்முறையாக பெண்கள் செய்தி வாசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பை தொடர்ந்து `சவுதியா' என்ற தேசிய தொலைக்காட்சியில் வீம் அல் தஹீல் என்ற பெண் செய்தி வாசித்து அந்நாட்டில் முதல்முறையாக செய்தி வாசித்த பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். தினமும் மாலை நேரங்களில் ஒளிபரப்பாகும் முக்கிய செய்திகளை வாசிக்க மட்டும் இவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவரின் சாதனையை சவுதியா தமது சமூக வலை தள பக்கத்தில் கொண்டாடி வருகிறது. இந்த இளம் பெண் சி.என்.பி.சி அரேபியா என்ற பத்திரிக்கையில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story

மேலும் செய்திகள்